’கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா’ 25-ந்தேதி நடைபெறும் - அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-22 12:53 IST

சென்னை,

சென்னையில் அரசு செய்தித்தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ். செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்த்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும், தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் இதில் கலந்துகொள்கிறார். 

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ”

இவ்வாறு அவர் பேசி வருகிறார். 

 

Tags:    

மேலும் செய்திகள்