பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சிறுவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-11-12 05:12 IST

கோப்புப்படம் 

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் கடந்த 1 ஆண்டாக தேனி பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. சிறுமியின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய், தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவியை கம்பம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றதாகவும், மாணவியை தனது பாட்டி வீட்டில் தங்க வைத்திருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவி இருக்கும் இடத்துக்கு சென்று அவரை போலீசார் மீட்டனர். அவரை அழைத்துச் சென்ற பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலை பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்