சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு இன்றுடன் நிறைவு

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படும்
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு இன்றுடன் நிறைவு
Published on

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

இதனிடையே, செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) சென்னை மேயரால் கடந்த அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர். தற்போது வரை 56 ஆயிரத்து 378 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

முன்னதாக, சென்னையில் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் வீடு வீடாக ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com