சென்னை: பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப்பொருளை தீயிட்டு அழித்த காவல்துறை
சட்ட வழிமுறைகள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.;
தமிழகம் முழுவதும் நடத்தப்படும் போதைப்பொருட்கள் சோதனையில் கிலோ கணக்கில் கஞ்சா உள்பட போதைப்பொருட்களை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த போதைப்பொருட்கள் கோர்ட்டுகளில் ஒப்படைக்கப்பட்டு வழக்குகள் நிறைவடைந்தப்பின் சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் உள்ள பாய்லரில் அதனை கொட்டி எரிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் 197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் இன்று தீயிட்டு அழித்தனர். தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் வைத்து போதைப்பொருளை தீயிட்டி எரிந்தனனர். சட்ட வழிமுறைகள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது.