அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.;
மதுரை,
மதுரையில் இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். சில காளைகள், மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்துவிட்டு தப்பிச்செல்கின்றன. இவ்வாறு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை கான்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது விழா மேடையில் அமர்ந்தவாறு முதல்-அமைச்சர், போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர் ராஜேஷ் என்பருக்கு தங்க மோதிரத்தை பரிசாக முதல்-அமைச்சர் அணிவித்தார்.