திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.;

Update:2025-12-07 22:14 IST

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பணி தொடங்கி இருப்பதால், 2026-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொடக்கம் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது. வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) 10 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். தங்கள் மாவட்டத்துக்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஓரிடத்தில் அமர வைத்து இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்