டிட்வா புயல் எதிரொலி: அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை

கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
டிட்வா புயல் எதிரொலி: அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவில் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், டிட்வா புயல் காரணமாக திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாமலையார் மலை மீது ஏற பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com