தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவிழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.;
சென்னை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. வருகிற 3-ந்தேதி சிகர நிகழ்ச்சியான, அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில், அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அதிநவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ்கள் வருகிற 2, 3 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர்சாதன, குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவு பஸ்கள் வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.