டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.;

Update:2025-12-09 10:10 IST

தலைநகர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்