சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

சி.பி.ராதாகிருஷ்ணனை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்;

Update:2026-01-02 20:49 IST

சென்னை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொது வரவேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நாளை காலை சி.பி.ராதாகிருஷ்ணன் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சித்தர் தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்