சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் போக்சோவில் கைது

சாத்தான்குளம் அருகே மேல வசப்பனேரியை சேர்ந்த முதியவர் ஒருவர், ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார்.;

Update:2026-01-22 19:21 IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மேல வசப்பனேரியை சேர்ந்த தேவராஜ்பிச்சை (வயது 68) என்பவர், ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அவரது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலம்மாள் விசாரணை நடத்தி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேவராஜ்பிச்சை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்