சென்னையில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

மாத்தூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டிப்பிடித்தனர்.;

Update:2025-11-25 17:39 IST

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து அப்டுகாயமடைந்த ஆனந்தனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, மாத்தூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டிப்பிடித்தனர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் மாடுகளை அவர்கள் தொடர்ந்து சாலைகளிலேயே விடுவதாக மாநாகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்