காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் கடந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதி முதல் தொடங்கியது. கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்;

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுவரை 5 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை உற்சாகத்துடன் அளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்க, வருகிற (30.1.2026) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறுவது நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com