சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை - போக்சோ சட்டத்தில் கைது

மது போதையில் பெற்ற மகளுக்கு, தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-10-19 14:55 IST

கோப்புப்படம் 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயதுள்ள நபர் அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட அந்த நபர் சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த தனது 17 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணையில் தனது தந்தை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் போலீசார் அந்த நபரை புழல் சிறையில் அடைத்தனர்.

மது போதையில் பெற்ற மகளுக்கு, தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்