9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-12-11 08:55 IST

கோப்புப்படம் 

மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவியின் கர்ப்பத்திற்கு அவரது தந்தைதான் காரணம் என்பதும், கடந்த இரண்டு மாத காலமாக சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற பிறகு டீக்கடையில் வேலை செய்து வந்த தந்தை தனது மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்