தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது
நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.;
சென்னை,
அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும்.
அந்த வகையில், 2011ல், நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரி மாதம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்னோட்டமாக, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மூன்று இடங்களில், இன்று முதல், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
* இந்த பணியின் போது, 34 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன.
* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை பணிகள் தமிழ்நாட்டில் இன்று (10.11.25) தொடங்குகிறது
* வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை இன்று முதல் நவ.30 வரை நடைபெற உள்ளது. நவ.1 முதல் 7ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு செய்வதற்கான முன்-சோதனை நடைபெற்றிருந்தது
* முன்சோதனையில் மொபைல் செயலிகளில் வாபைல் செயலிகளில் நாவுகள் கே செயலிகளில் தரவுகள் சேகரித்து டிஜிட்டல் லேஅவுட் வரைபடங்கள் வரையப்படும்.
* மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலாண்மை & கண்காணிப்பு அமைப்பு மூலம் முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும்.
* மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்பு என பல்வேறு துறையினர் பணியில் ஈடுபடுவர். மக்கள்தொகை களப் பணிக்கு முன் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி தரப்படும்.