திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது.;

Update:2025-04-05 19:21 IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்ட நிலையில் காணப்பட்டன.

இதே போன்று குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் மலை ஓர பகுதிகளில் பெய்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகமானது.

இன்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்தனர். மலை ஓர பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பேருராட்சி அதிகாரிகள் தண்ணீர் அதிகளவு ஆர்ப்பரித்து பாயும் இரண்டு பகுதிகளில் இருந்த சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2 நாட்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்