நெல்லையப்பர் கோவிலில் வேட்டி அணிந்து சாமி தரிசனம் செய்த வெளிநாட்டினர்

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.;

Update:2025-06-29 02:32 IST

நெல்லை,

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது. புகழ் பெற்ற இந்த கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேற்று நெல்லையப்பர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான வேட்டி அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்த்தனர்.

பின்னர், அவர்கள் கூறுகையில், நெல்லையப்பர் கோவிலில் சிற்பங்கள் அனைத்தும் எங்களை கவர்ந்து உள்ளது. சிவனை வழிபட்டுள்ளதால் எங்களுடைய மனது நிம்மதி அடைந்து உள்ளது என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்