தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் சித்தர்களும் முனிவர்களும் வழிபடப்பட்ட இக்கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி தோறும் கிரிவலம் நடப்பது வழக்கம் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர். பின்பு உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
கூட்டு பிரார்தனையில், “தொழிலாளர்கள், வாழ்கையில் உயர துணைபுரிவாய் தோரண மலை முருகா.. கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சிறக்க அருள்வாய் முருகா.. கூட்ட நெரிசலில் சிக்கி மரித்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தருவாய் முருகா.. வனவிலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காத்தருள்வாய் தோரண மலை முருகா.. தொழில் வளத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்பட வைப்பாய் தோரண மலை முருகா.. நாடி வந்த அனைவருக்கும் கேட்டவரம் தருவாய் தோரண மலை முருகா” என வேண்டப்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது.