சிவகங்கையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.;

Update:2025-11-30 17:48 IST

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே, காரைக்குடி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

சமீபத்தில் தென்காசியில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்