விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன் - செங்கோட்டையன்

3-வது தலைமுறையாக நல்லாட்சியை தருவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என செங்கோட்டையன் கூறினார்.;

Update:2025-12-14 17:08 IST

திருச்செங்கோடு,

திருச்செங்கோட்டில் நடைபெற்ற த.வெ.க. ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-

என்னுடைய குல தெய்வமே திருச்செங்கோடு அர்த்தநாரி ஈஸ்வரன் தான். என்னுடைய தந்தை பெயர் அர்த்தநாரி. என்னுடைய பெயர் செங்கோட்டையன். கோட்டை எங்கு இருக்கிறது என்பதை நாம் உணர்வோம். மிக விரைவில் தலைவர் விஜய்யை கோட்டையில் அமர வைப்போம். இது தான் நம்முடைய லட்சிய பயணமாக இருக்கும். 1972-ல் அ.தி.மு.க.வில் இணைந்து புரட்சி தலைவருடன் அரும்பணி ஆற்றினேன்.

அதன் பிறகு புரட்சி தலைவி அம்மாவுடன் நின்று சிறந்த முறையில் பணிகளை நிறைவேற்றினோம். இன்று 3-வது தலைவராக நாளை ஆட்சி கட்டிலில் தளபதி விஜயை அமர வைப்பேன். 3-வது தலைமுறையாக நல்லாட்சியை தருவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லை. நல்லவர் நாட்டிற்கு தேவை. மக்கள் நேயமிக்க சேவை செய்வார். உங்களை போன்ற இளைஞர்களை தட்டி எழுப்புகிற ஆற்றல் மிக்க தலைவர் விஜய்.

இவ்வாறு அவர் பேசினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்