தூய்மை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி

தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.;

Update:2025-12-09 06:22 IST

சென்னை,

பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி அம்பத்தூர் மண்டலத்தில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பை அள்ளும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வேறு மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வெளி மண்டலத்தில் இருந்து வரும் தூய்மை பணியாளர்களை சிலர் பணி செய்ய விடாமல் தடுப்பதாக சென்னை மாநகராட்சிக்கு புகார் வந்தது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் 1,457 தற்காலிக தூய்மை பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக பணிக்கு வராமல் போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, தூய்மை பணியாளர்கள் சீருடை அணிந்து பணிக்கு வரும் போது 3-ம் நபர் யாரேனும் தடுக்க முயன்றாலோ, பணியை செய்ய விடாமல் தடுத்தாலோ உடனே 9445190097 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்