வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.;
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடிகள் பெருமளவில் பரவி வருகின்றன. இந்த மோசடி வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த மாதிரியான போலி செய்திகள் பொதுவாக "Banks", "Aadhaar Updates", "Traffic e-Challan Payment" போன்ற பெயர்களில் நம்பகமான குழுக்கள் போன்று போலி வாட்ஸ்அப் குழுவில் இருந்து அனுப்பப்படுகின்றன. அந்த குழுக்களில் உள்ள மோசடியாளர்கள் "Rewards", "KYC updates", "cashback offers" என்ற பெயரில் போலியான APK file அல்லது லிங்ஸ் அனுப்புவார்கள். அதனை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால் மோசடியாளர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்து அதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் செய்திகள், வங்கி கணக்கு விவரங்கள், OTP மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடியும் மேலும் உங்கள் whatsapp கணக்கை பயன்படுத்தி உங்கள் செல்போன் contact-ல் உள்ள நபர்களுக்கும் அந்த மோசடியை பரப்புகின்றனர்.
எனவே இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத APK அப்ளிகேஷன்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் வழியாக வரும் எந்த ஒரு பயன்பாட்டையும் அது நண்பர் அல்லது குடும்பத்தினர் அனுப்பியதாக இருந்தாலும் கூட நிறுவ வேண்டாம்.
இதிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்:
இதுபோன்ற APK file அல்லது லிங்க்-ஐ திறக்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ கூடாது.
வாட்ஸ்அப்பில் இரு நிலை உறுதிப்படுத்தலை (Two-Step Verification) நிறுவி அதன் வழிமுறைகளை பின்பற்றி PIN அமைப்பை பயன்படுத்தி பாதுகாக்கலாம். உங்கள் கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ஹேக் செய்யப்பட்டாலோ உடனடியாக support@whatsang.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி அல்லது https://www.whatsapp.com/contact/?subject=messenger என்ற இணைப்பை பார்வையிடவும்.
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும். எனவே இதுபோன்ற சைபர் மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.