கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் கார், பைக்குகளை சுத்தம் செய்யும் வாட்டர் வாஷ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அரவிந்த் என்ற இளைஞரும் சாஹீல் என்ற சிறுவனும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், அரவிந்த், சாஹீல் இருவரும் நேற்று இரவு கடையில் காருக்கு வாட்டர் வாஷ் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரையும் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், கடை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அரவிந்த், சாஹீல் இருவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.