கமல்ஹாசன் பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கமல்ஹாசனுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-
“மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழவும், சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.