திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா - மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோவில் கருவறையின் முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com