மதுரை-துபாய் விமானம் இன்று ரத்து
மதுரை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.30 மணி அளவில் துபாய் சென்றடையும்.;
மதுரையில் இருந்து துபாய் செல்ல ஒரே ஒரு பயணி மட்டும் இருந்ததால் துபாய் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் விமானம் சரியாக 10.20 மணிக்கு மதுரை வந்தடையும். அந்த விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு துபாய் சென்றடையும்.
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ய இருந்ததால் துபாய் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் இன்று துபாய் செல்ல இருந்த அந்த ஒரு பயணிக்கு வரும் 26-ம் தேதி துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.