22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு

கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு
Published on

சென்னை,

மக்கள் நீதிமய்யத்தின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

22-3-2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com