உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள மகளிர் கபடி அணி - மு.க.ஸ்டாலின் பாராட்டு

தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற மகளிர் கபடி அணியை முதல்-அமைச்சர் பாராட்டி உள்ளார்.
உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள மகளிர் கபடி அணி - மு.க.ஸ்டாலின் பாராட்டு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 35-28 புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, கபடி உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு என் பாராட்டுகள்!

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமித தருணம்!

சரியான ஆதரவும், முன்னேறுவதற்கான சூழலும் அமைந்தால், உலக அரங்கைத் தங்கள் வசமாக்க இயலும் என மீண்டுமொருமுறை இந்தியாவின் மகள்கள் நிரூபித்துள்ளனர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com