நெல்லை: மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.80 ஆயிரம் திருட்டு
நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவருக்குள் இருந்து ரூ.80 ஆயிரம் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை மாவட்டம், உவரி, ராஜா தெருவைச் சேர்ந்த கான்ஸ்டன் (வயது 31), நேற்று முன்தினம் (30.4.2025) ஏ.டி.எம்.-மில் ரூ.80 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு, அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவருக்குள் வைத்துள்ளார். பின்னர் உவரி, நடுத்தெருவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதுகுறித்து கான்ஸ்டன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உவரி, நடுத்தெருவைச் சேர்ந்த ஜெமிலா (48) பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், ஜெமிலாவை நேற்று (1.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.