“த.வெ.க.வில் இணைவார் ஓ.பன்னீர்செல்வம்” - கவிதா ராஜேந்திரன்

ஓ.பி.எஸ். நிச்சயம் தளபதியோடு வந்து சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கவிதா ராஜேந்திரன் கூறினார்.;

Update:2026-01-11 17:13 IST

அரியலூர்,

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் கவிதா ராஜேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்தார்.

இந்நிலையில் த.வெ.க.வில் இணைந்த கவிதா.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியகையில், “ஓ.பி.எஸ், நிரந்தரமான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். நிச்சயம் அவரும் தளபதியோடு வந்து சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தளபதியும் அவரை அழைத்திருக்கிறார். சில நிர்பந்தங்கள் காரணமாக அங்கே இருக்கின்றார். இல்லையெனில் கடந்த ஜனவரி 1-ம் தேதியே அவர் த.வெ.க.-வில் இணைந்திருப்பார்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்