ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவிலும் செயல்பட்டு வந்தார் ஜே.சி.டி.பிரபாகர்.;
சென்னை,
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். பொங்கலுக்கு முன் பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்தநிலையில், ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவில் இணைந்த பின் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வீடுதோறும் விஜய் முழக்கமாக உள்ளது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி விஜயை சந்தித்தபோது ஏற்பட்டது. பொறுப்பு இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழும் என்பதற்காக இணைந்துள்ளேன் என்றார்.