முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி...!
சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது.;
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.