காதலை பிரித்ததால் ஆத்திரம்: நண்பரின் மனைவி, மாமியாரை தாக்கிய வாலிபர் கைது

அருண் காதலித்த பெண்ணிடம் அவருக்கு பல பெண்களிடம் பழக்கம் இருக்கிறது என்று அவரது நண்பர் கூறியுள்ளார்.;

Update:2026-01-17 23:43 IST

கோப்புப்படம் 

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (24 வயது). இவருடைய நண்பர் அருண் (24 வயது). இவர் சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர். சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்த இவர்கள் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அருண் காதலித்த பெண்ணிடம் அவருக்கு பல பெண்களிடம் பழக்கம் இருக்கிறது என்று கார்த்திக் சொல்லியதாக தெரிகிறது. இதனால் அவரது காதலி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருண் சூளைமேடு, ஶ்ரீராமபுரம் மெயின் ரோட்டில் உள்ள கார்த்திக்கின் மனைவி சர்மிளாவின் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது தாயாரையும் ஆபாசமாக திட்டி தாக்கி உள்ளார். மேலும் கொலைமிரட்டலும் விடுத்து சென்றார்.

இதுகுறித்து சர்மிளா அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அருண் கைது செய்யப்பட்டார். அவர் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உட்பட 6 குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் அருண், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்