மழைநீர் வடிகால் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிவடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
600 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.;
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் புதிய பணிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4½ ஆண்டுகளில் 1,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிந்துள்ளது. தற்போது 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முடிக்கப்படும்.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அரசியலுக்காக மட்டும் பேசக்கூடாது. அவர் திண்டிவனத்தை தாண்டி கிண்டியை வந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.