மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை மறுசீரமைப்பு

மரப்பாதையை சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.;

Update:2025-07-04 22:35 IST

சென்னை,

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் கடந்த 2022-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை திறக்கப்பட்டது. கடல் அழகை அருகில் சென்று ரசிக்கும் வகையில் மரப்பாதை அமைக்கப்பட்டது. இந்த மரப்பாதையை ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் மரப்பாதை சேதம் அடைந்து மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. எனவே, மரப்பாதையை சீரமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மரப்பாதையை சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மரப்பாதையின் கைப்பிடிகள், உடைந்த பலகைகள் உள்ளிட்டவைகளை அகற்றிவிட்டு புதிதாக பலகைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மரப்பாதை சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, மெரினாவில் நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, மண்டலக்குழு தலைவர் மதன்மோகன், கவுன்சிலர் மங்கை, சிறப்பு திட்டங்கள்துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்