‘மேற்கத்திய நாடுகளுடனான உறவு முக்கியமானது’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்கள் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.;

Update:2026-01-02 15:20 IST

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“மக்கள் உங்களை தவறாக புரிந்து கொள்வதை தடுக்க, நன்றாக தொடர்பு கொள்வதே தீர்வாகும். உங்கள் தொடர்புகள் நன்றாகவும், தெளிவாகவும், நேர்மையாகவும் இருந்தால் மற்ற நாடுகளும், மற்ற மக்களும் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். நாம் ஏன் அப்படி இருக்கக்கூடாது என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. பெரிய நவீன தேசிய அரசுகளாக மாறிய பண்டைய நாகரிகங்கள் மிகவும் குறைவு. நாம் அவற்றில் ஒன்று.

நமது கடந்த காலத்தைப் பற்றிய உணர்வு நமக்கு உள்ளது. நாம் ஜனநாயக அரசியலை தேர்ந்தெடுத்தோம். தற்போது ஜனநாயகம் என்ற கருத்து ஒரு உலகளாவிய அரசியல் கருத்தாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான உறவு முக்கியமானது. உறவுகளின் மூலம்தான் உலகத்தை நாம் வடிவமைக்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்