தூத்துக்குடியில் லாரி உரிமையாளரை தாக்கிய ரவுடி கைது

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.;

Update:2025-11-07 02:59 IST

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் கிராமம் வடகிழக்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பாரத் (வயது 33). இவர் சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் புதிய துறைமுகத்திலிருந்து நிலக்கரிகளை ஏற்றி அரசரடி அனல்மின் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் சென்னை மணலி எம்.ஜி.ஆர்.நகரில் வசித்து வரும் இப்ராஹிம் மகன் மூசா முகமதுகாசிம்(27), தற்போது தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வசித்து வந்து, அங்குள்ள ஒரு லாரி செட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பாரத் லாரியில் லிப்ட் கேட்டாராம் ஆனால் இவர் குடிபோதையில் இருந்ததால் லாரியில் ஏற்ற மறுத்து விட்டாராம்.

இந்த நிலையில் பாரத் தனது லாரியுடன் புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு எடை நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மூசா முகமதுகாசிம் லாரி மீது கல்லை எரிந்து கண்ணாடியை உடைத்தாராம். மேலும் இதனை தட்டிக் கேட்ட பாரத்தை ஸ்பேனரால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதுகுறித்து பாரத் தெர்மல்நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பிள்ளை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி விசாரணை நடத்தி மூசா முகமது காசிமை கைது செய்தார். அவர் மீது முத்தையாபுரம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளது. இவர் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்