இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை; கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நண்பருடன் சிம்யா ஓட்டம் பிடித்து கன்னியாகுமரியில் தங்கியிருப்பது தெரியவந்தது.;

Update:2026-01-22 21:50 IST

மதுரை,

மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர், குடும்பத்துடன் திருப்பூர் முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள சாய ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மகள் சிம்யா (22). இவருக்கும், சாய ஆலையில் வேலை செய்த திருப்பூரை சேர்ந்த உறவினரான பிரேம்குமார் (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிம்யா தினமும், அதிக நேரம் செல்போன் பார்த்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், கடந்த 2-ந் தேதி சிம்யா, திடீரென வீட்டில் இருந்து குழந்தையுடன் மாயமானார். அவர் எங்கே போனார்?, என்னஆனார்? என்று தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிம்யாவின் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மகளை காணவில்லை என்று, திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நண்பருடன் சிம்யா ஓட்டம் பிடித்து கன்னியாகுமரியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிம்யாவை மீட்டு நேற்று முன்தினம் திருப்பூர் அழைத்து வந்தனர்.பின்னர் சிம்யாவுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இதுதொடர்பாக சிம்யாவுக்கும், அவருடைய தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிம்யாவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கொடூரமாக அறுத்தும், வயிறு, நெஞ்சுப்பகுதியில் குத்தியும் கொடூரமாக கொலை செய்தார். இதனால் வீடு முழுவதும் ரத்தம் ஆறாக ஓடியிருந்தது. ஆனாலும் ஆறுமுகம், கொலையுண்டு கிடந்த மகள் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.இதற்கிடையே குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தின் மனைவி, அங்கு ரத்த வெள்ளத்தில் மகள் பிணமாக கிடந்ததையும், அவளது உடல் அருகே அமர்ந்து கணவர் அழுது கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் கண்ணீர் விட்டுகதறி அழுதார். இவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் இதுகுறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிம்யாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆறுமுகத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மகளை கொலை செய்ததற்கான காரணம் குறித்து ஆறுமுகம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தா. அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் மதுரை. வேலைக்காக எனது மனைவி, மகள் சிம்யா ஆகியோருடன் திருப்பூர் வந்து சாய ஆலையில் பணியாற்றினேன். மகள் திருமண வயதை எட்டியதால் சாய ஆலையில் வேலை செய்த திருப்பூரை சேர்ந்த எனது உறவினரான பிரேம்குமார் (வயது 27) சிம்யாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தே. சந்தோஷமாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந்தநிலையில் சிம்யா தினமும் அதிக நேரம் செல்போன் பார்த்ததால் அவருக்கும் பிரேம்குமாருக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நானும் அவளை கடுமையாக கண்டித்தேன். கடந்த 2-ம் தேதி திடிரென சிம்யா வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடினோம். ஆனால் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிம்யாவை கண்டுபிடித்து தரக்கோரி திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நண்பர் ஒருவருடன் சிம்யா ஓட்டம் பிடித்து கண்டுபிடித்தனர். அவள் கன்னியாகுமரில் தங்கி இருப்பது தெரியவந்தது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிம்யாவை மீட்டு நேற்று முன் தினம் திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் சிம்யாவுக்கு போலீசார் தகுந்த அறிவுரை கூறி எங்களுடன் அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை எனது மனைவி பேத்தியுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது நான் சிம்யாவுக்கு அறிவுரைகள் கூறினேன். இது தொடர்பாக எங்களுக்குள் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருமணமான நீ வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டதால் எனக்கு பெரிய தலை குனிவு ஏற்பட்டு விட்டது. நான் வெளியே எப்படி நடமாடுவேன். மானமே போய் விட்டது. என கோபத்தில் சத்தம் போட்டேன். இதில் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிம்யாவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கர கரவென அறுட்தேன். வயிறு, நெஞ்சுப்பகுதியில் குத்தியும் கொலை செய்தேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் ஆறாக ஓடியது. இருப்பினும் பெற்ற மகளை கொலை செய்துவிட்டோமே என்ற துக்கம் தாங்காமல் கதறி அழுதேன். இதற்கிடையே வெளியே சென்று இருந்த மனைவி, பேத்தி வீட்டுக்கு வந்தனர். மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நடந்த விபரத்தை கேட்டறிந்தனர்.பின்னர் போலீசார் விசாரணை நடத்ட்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இன்ஸ்டகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்ததால் ஏற்பட்ட தலைகுனிவு காரணமாக மகளை தந்தையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்