ஆரணி-சைதாப்பேட்டையில் சப்த மாதா கோவில் கும்பாபிஷேகம்
கோவில் வளாகத்தில் ஹரிஹரன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடந்தது.;
ஆரணி-சைதாப்பேட்டை மலையாம்பட்டு சாலையில் சரஸ்வதி நகரில் உள்ள சக்தி பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்த மாதாக்கள் மற்றும் பைரவர் சன்னதி கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் ஹரிஹரன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க 2 கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களுடன், மங்கள வாத்தியங்களுடன் கோவிலில் வலம் வந்து, அதன்பின் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.