திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.;

Update:2025-11-05 23:33 IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த கோவிலின் அருகேயுள்ள கடல் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்