மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும் - விஜய் சுதந்திர தின வாழ்த்து
சுதந்திர தினத்தை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவ சமுதாயம் அமைய வழிவகுக்கும். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இத்திருநாளில், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.