செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டு: திருமாவளவன்

எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.
செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டு: திருமாவளவன்
Published on

கோவை,

கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆய்வு அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி இருப்பது கவலைக்குரியது.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய இந்திய அரசு, இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.

செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய சூழலில் அவரது நிலை அந்த கட்சிக்கு சாதகமானது அல்ல. த.வெ.க.வில் அவர் இணைந்தது அவரது சொந்த விருப்பம். பா.ஜனதாவால் அ.தி.மு.க. உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பா.ஜனதா நடத்திய சித்து விளையாட்டின் விளைவு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com