மாணவியிடம் பாலியல் சீண்டல்: வாலிபருக்கு வலைவீச்சு
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மட் அணிந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியின் அருகே வந்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இது குறித்து பெற்றோர் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது:- வாலிபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை எந்த சமூக வலைத்தளத்திலும் வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.