கல்லூரிக்கு போகச் சொன்னதால் விபரீதம்.. தந்தை தலையில் கல்லைப் போட்டுகொன்ற மகன்

படித்தால்தான் முன்னேற முடியும் என தந்தை அறிவுரை கூறியதால் அவரது மகன் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-06-25 11:55 IST


நெல்லை அருகே கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை தட்டிக்கேட்டதால் தந்தையின் தலையில் கல்லை போட்டு அவரது மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படித்தால்தான் முன்னேற முடியும் என தந்தை மாரியப்பன் அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி (19) இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தந்தை மாரியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், தங்கப்பாண்டியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்