திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.;

Update:2025-12-09 21:22 IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உட்கோட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா ஆகிய திருவிழாக்கள் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

மேற்சொன்ன திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினரை பாராட்டும் விதமாக திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார் ஏற்பாட்டின்படி இன்று திருச்செந்தூரில் உள்ள ஒரு மஹாலில் வைத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் மேற்சொன்ன திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்