நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு வந்த அடுத்த சிக்கல்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Srikanth, Krishna's next problem
Published on

சென்னை,

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டநிலையில், இருவருக்கும் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அடுத்த சிக்கல் வந்துள்ளது.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com