தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் - மு.க.ஸ்டாலின் பதிவு

எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரெயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பாஜக என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-12-07 16:35 IST

சென்னை,

மதுரையில் கட்டப்பட்டுள்ள மேலமடை பாலம் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதுரை நகருக்கு முல்லை பெரியாறு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை இன்று திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

️ பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம்

உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம்

இவைதான் நமது #DravidianModel பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல் ♥️

#AIIMS வராது; #MetroRail தராது; #கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ.க. பேசும் …….. அரசியல்.

தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்