செங்கோட்டையன் கிளைதான் மாறியிருக்கிறார்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு டெல்லி அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகம் ஆக இருக்கு என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
செங்கோட்டையன் கிளைதான் மாறியிருக்கிறார்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

ஈரோடு,

ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் கட்சி மாறவில்லை. ஒரு கட்சியின் வேறு ஒரு கிளைக்குதான் தாவி இருக்கிறார். இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி மனதில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அமித்ஷா மட்டும்தான். அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கிவிட்டுதான் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com