திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை - அமைச்சர் இ.பெரியசாமி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.;

Update:2025-12-07 17:12 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. அதற்கு சட்டமே வழிவகுத்து இருக்கிறது. உரிமை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லலாம் என்று சட்டம் கூறுகிறது. அதனால் சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறோம்.

த.வெ.க. அரசியல் கட்சியாக இன்னும் அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். ஒரே இரவில் ஆத்தூர் தொகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி 6 ஆயிரம் பேரையும், இறந்தவர்கள் என்று 16 ஆயிரம் பேரையும் என மொத்தம் 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அனுப்பி இருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையாக நடைபெறவில்லை. எனவே மத்திய அரசு இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்